கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பா.?! இதுவரை இல்லாத புது வரலாறு படைக்குமா 2021 தேர்தல்.?! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தமிழகத்தில் 2021 ஆம் வருட சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்திருந்தார். தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் பலரும் கூட்டணி ஆட்சிக்கு வழிவகை செய்கின்ற தொனியிலேயே பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “கூட்டணி ஆட்சி எனும் பேச்சுக்கே மக்கள் இடமளிக்கமாட்டார்கள்.

நா அழ வேண்டும் என நினைக்கிறீர்களா.? ஆவேசமாக பேசிய ஜெயக்குமார்.! -  Seithipunal

அதிமுக இருக்கும் இடம்தான் வெற்றி பெறும். 2021ல் எங்களுடைய கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என கூறினார். அதிமுக அரசுக்கு மக்கள் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வழி செய்வார்கள் என அதிமுகவினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாஜக நிர்வாகிகளின் கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தது இல்லை. காங்கிரஸ், திமுக, அதிமுக என்று எதுவாயினும் தனிக்கட்சி ஆட்சி தான் அமைந்துள்ளது. 

2006 தேர்தலில் திமுக 96 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனாலும் காங்கிரஸுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளவில்லை. தமிழகத்தில் கூட்டணி என்பது தேர்தலுக்காக மட்டும் தான் இருந்துள்ளது. கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பில்லை என அரசியல் விமர்சகர்கள் திட்டவட்டமாக தெரிவிக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

jayakumar press meet about coalition govt


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->