ஈபிஎஸ்.,ஐ விமர்சிப்பதா.! காங்கிரஸின் கொத்தடிமை திமுகவே நிறுத்திக் கொள்.! வரிந்து கட்டிய முக்கிய புள்ளி.!! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் "தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் #DelhiServicesBill மாநிலங்களவையில் நிறைவேறிய நேற்றைய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள்! எதிர்க்கட்சி ஆட்சி செய்தால் அந்த மாநிலத்தைக் கூடச் சிதைப்போம் என்ற பாஜகவின் பாசிசம் அரங்கேறிய நாளை வேறு என்ன சொல்வது?

29 வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு நாட்டின் தலைநகரையே தரைமட்டத்துக்குக் குறைத்த சதிச் செயலுக்கான தண்டனையை டெல்லி மாநில மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களும் விரைவில் தருவார்கள்!

மூன்று மாதமாக மணிப்பூர் எரிகிறது. அதை அணைக்க முடியாமல் , டெல்லியைச் சிதைக்கத் துடிக்கும் பா.ஜ.க.வின் தந்திரங்களை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில முதலமைச்சரின் அதிகாரத்தைக் குலைக்கும் இந்த மசோதாவை, பேரறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அடிமைக் கூட்டம் ஆதரித்து மாநிலங்களவையில் வாக்களித்திருப்பது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை.

"நான் யாருக்கும் அடிமையில்லை" என்றபடியே, பா.ஜ.க.வின் பாதம் தாங்கி, "கொத்தடிமையாக" தரையில் ஊர்ந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது" என பாஜகவையும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் விமர்சனத்திற்கு நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையின் மூலம் பதிலடி கொடுத்தார். இந்த நிலையில் மு.க ஸ்டாலினின் இத்தகைய விமர்சனத்திற்கு அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "காங்கிரசின் கொத்தடிமை திமுகவே நிறுத்திக் கொள்" டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா குறித்துப் பேசும் முதலமைச்சரே, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது..? 

மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு கொத்தடைமையாக இருந்த நீங்கள், எடப்பாடி பழனிச்சாமியை கொத்தடிமை என எப்படி சொல்ல முடிகிறது.? எமர்ஜென்சி காலத்தில் எந்த கட்சியால் அவதியுற்றமோ அந்தக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் தானே திமுகவினர்.

இரவு, பகல் பாரா உழைத்த தொண்டர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை தேர்தல் என்ற ஒரே காரணத்திற்காக மறந்து "நேருவின் மகளே வருக.. நிலையான ஆட்சி தருக" எனக்கூறி காங்கிரஸிற்கு கொத்தடிமையாக இருந்துவிட்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக்கொள்ள முடியாது" என தனது அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jaganmoorthy response to MKStalin comments on EPS


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->