துணைக் குடியரசுத் தலைவராக ஜெகதீப் தன்கர் இன்று பதவியேற்பு.! - Seithipunal
Seithipunal


துணை குடியரசுத் தலைவராக ஜெகதீப் தங்கர் இன்று பதவியேற்கிறார்.

நாட்டின் புதிய துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். கடந்த 6-ந் தேதி நடந்த தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக களமிறங்கிய அவர் 528 வாக்குகள் பெற்று, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மார்கரெட் ஆல்வாவை தோற்கடித்தார். 

புதிய துணை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெகதீப் தன்கருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், தற்போதைய குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில் நாட்டின் புதிய துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று (11.08.2022) காலை பதவியேற்கிறார். ஜெகதீப் தன்கருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். அப்போது, துணை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான வெற்றி சான்றிதழ் நகல் வாசிக்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jagadeep Dhankar sworn in as Vice President today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->