சீனியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!தமிழக சட்டப்பேரவை புதிய சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் தேர்வு! செங்கோட்டையனுக்கு புதிய பொறுப்பு! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையின் புதிய பேரவைத் தலைவராக தவெக எம்.எல்.ஏ ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று சட்டப்பேரவையில் வெளியாக உள்ளது. அதேபோல், துணைச் சபாநாயகராக துறையூர் தொகுதி எம்.எல்.ஏ ரவிசங்கரும் போட்டியின்றி தேர்வாக உள்ளார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. இதனைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய் கடந்த மே 10ஆம் தேதி தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்.

புதிய எம்.எல்.ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் பணிக்காக கருப்பையா தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நிரந்தர பேரவைத் தலைவரை தேர்வு செய்யும் நடவடிக்கைகள் நேற்று தொடங்கின.

ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்ற தவெக எம்.எல்.ஏ ஜேசிடி பிரபாகர், பேரவைத் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசனிடம் தாக்கல் செய்தார். அப்போது முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அதேபோல், துறையூர் தொகுதி எம்.எல்.ஏ ரவிசங்கர் துணைச் சபாநாயகர் பதவிக்காக மனுத்தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த பின்னரும் எதிர்க்கட்சிகள் சார்பில் வேறு யாரும் போட்டியிட முன்வராததால், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இன்று சட்டப்பேரவை கூடும் போது தற்காலிக சபாநாயகர் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் புதிய சபாநாயகரை முதலமைச்சர் விஜய்யும் எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து சபாநாயகர் இருக்கைக்கு அழைத்துச் செல்வார்கள். தொடர்ந்து அனைத்து கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து உரையாற்றுவார்கள்.

இதற்கிடையில், சட்டப்பேரவை முன்னவராக அமைச்சர் செங்கோட்டையன் நியமிக்கப்படலாம் என்றும், அரசு கொறடாவாக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பொறுப்பேற்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு விரைவில் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கும் சூழலில், சபாநாயகர் மற்றும் துணைச் சபாநாயகர் தேர்வு எந்த எதிர்ப்பும் இல்லாமல் முடிவடைந்திருப்பது தவெக தரப்புக்கு முக்கிய அரசியல் பலமாக பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் அதிமுகவில் சட்டசபை குழுத் தலைவர் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் அணிகள் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகவும், யாருக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jackpot for seniors JCT Prabhakar elected as the new Speaker of the Tamil Nadu Legislative Assembly New responsibility for Sengottaiyan


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->