நாங்க மட்டும் தான்!!! தமிழகத்தில் எப்பவுமே திமுக ஆட்சி தான்... 2026, 2031, 2036 எல்லாமே திராவிட மாடல் தான்...! - முதலமைச்சர் - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதகை மலைப்பகுதியில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அவருடன் நீலகிரி எம்.பி.ஆ.ராசாவும் நடைபயிற்சி செய்தார்.இதைத்தொடர்ந்து,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களை சந்தித்த உரையாடினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:

அப்போது அவர் தெரிவித்ததாவது,"உதகையில் 5 நாள் பயணம் மிக எழுச்சியாக இருந்தது. மக்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. திராவிட மாடல் அரசு மீது மக்கள் காட்டும் ஆதரவை பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக உள்ளது.மலர்கண்காட்சி எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது.

உச்சநீதிமன்றத்தில் ஜனாதிபதி கருத்து கேட்ட விவகாரம் தொடர்பாக, மற்ற மாநில முதலமைச்சர்களுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிதான் நீடிக்கும்.

2026 மட்டுமல்ல 2031, 36 எல்லாமே தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி தான் நீடித்து இருக்கும் " எனத் தெரிவித்தார்.இதைப்பற்றிய விமர்சனங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

It will always DMK rule TN 2026 2031 2036 everything Dravidian model Chief Minister


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->