இபிஎஸ் கோட்டையில் ஓட்டையா...? எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவுக்கார பெண் திடீரென தவெக-வில் ஐக்கியம்...! - அதிர்ச்சியில் அதிமுக - Seithipunal
Seithipunal


தமிழக அரசியல் களத்தில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் தவெக, சட்டசபை தேர்தலில் கணிசமான வெற்றியை பதிவு செய்து ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ள தவெக சார்பில், முதல்-அமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார்.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு, தவெகவின் அரசியல் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளில் இருந்து பல நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் தவெக நோக்கி நகர்ந்து வருவது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமி குடும்பத்திலிருந்தே முக்கிய இணைவு ஒன்று அரங்கேறியுள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் உறவுக்கார பெண்ணும், தொழிலதிபருமான மேனகா இன்று அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்தார்.இந்த இணைவு, அதிமுக வட்டாரத்தில் புதிய அரசியல் விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.

குறிப்பாக, எதிர்க்கட்சிகளில் இருந்து முக்கிய முகங்கள் தவெகவில் தொடர்ந்து இணைந்து வருவது அரசியல் சமன்பாடுகளில் மாற்றத்தை உருவாக்கும் என பரவலாக பேசப்படுகிறது.

தவெகவில் இணைந்த மேனகாவை, கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் கட்சியின் அடையாளத் துண்டை அணிவித்து வரவேற்றார்.இந்த நிகழ்வு, தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is there hole EPS fort Edappadi Palaniswami close relative suddenly joins tvk AIADMK shock


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->