சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலையை போட்டியிட வைக்க டெல்லி தலைமை ஆலோசனை..? - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு கோவை, சென்னையில் தலா ஒரு தொகுதியை மட்டுமே ஒதுக்கியுள்ளது. இதில் சென்னையில் மயிலாப்பூரும், கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது.

இந்த தேர்தலில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுவாரா என கேள்வி எழுந்துள்ளது. சென்னை மயிலாப்பூரில் தமிழிசை செளந்தரராஜனும், கோவை வடக்கில் வானதி சீனிவாசனும் போட்டியிட உள்ளனர்.

அதேநேரம் இந்த தேர்தலில் அண்ணாமலை போட்டியிட வாய்ப்புக் குறைவு எனக் கூறப்படுகிறது. அதாவது, கோவை சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையத்தில் அண்ணாமலை களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த இரண்டு தொகுதிகளையும் அதிமுக தன் வசப்படுத்தியுள்ளது.

திருப்பூர் தெற்கு பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அங்கு இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா தங்கராஜின் மகன் சுப்பிரமணியத்திற்கு வாய்ப்பு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்ததாக, பல்லடத்தை ஒதுக்க அதிமுக முன்வந்ததாக கூறப்படும் நிலையில், 2024 மக்களவை தேர்தலில் குறைந்த வாக்குகள் பெற்ற தொகுதி என்பதால் அங்கு போட்டியிட அண்ணாமலை விரும்பவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை சந்தித்து அண்ணாமலை கடிதம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சொல்லலில் அண்ணாமலை இந்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது என் விருப்பம் என அக்கட்சியின் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். குறிப்பாக பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் தொகுதியில் அண்ணாமலையை போட்டியிட வைக்க, டெல்லி தலைமை ஆலோசனை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is the Delhi leadership considering fielding Annamalai in the Assembly elections


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




சினிமா

Seithipunal
--> -->