நீண்ட போராட்டத்துக்குப் பின் தீர்வு நெருங்குதா..? ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு...! - Seithipunal
Seithipunal


நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம், எழும்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகம், சேப்பாக்கம் எழிலகம், கடற்கரைச் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசுத் துறை மையங்களை முற்றுகையிடும் வகையில் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

பல நாட்களாக நீடிக்கும் இந்த போராட்டத்தின் பின்னணியில், இடைநிலை மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முன்வந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், இன்று அவரது முகாம் அலுவலகத்தில் ஆசிரியர்களுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இந்த பேச்சுவார்த்தை ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு தீர்வை ஏற்படுத்துமா? என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is solution finally nearing after long struggle Minister Anbil Mahesh holds talks teachers


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->