அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் களமிறங்கும் சீமான்? வேலையை தொடங்கிய நாதக!திமுகவிடம் நெருக்கம் காட்டும் சீமான்! - Seithipunal
Seithipunal


பீகாரில் நடைபெற்ற பங்கிப்பூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி பெற்ற வெற்றி, பல மாநில அரசியல் வட்டாரங்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதேபோன்ற அரசியல் முன்னேற்றத்தை தமிழ்நாட்டிலும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இடைத்தேர்தலை முக்கிய இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

விரைவில் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிட சீமான் தீவிர ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, "இடைத்தேர்தலை சந்திக்க வெறியோடு காத்திருக்கிறேன்" என்று அவர் பொதுவெளியில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில், அம்பாசமுத்திரத்தில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவது சவாலாக இருக்கலாம் என்ற மதிப்பீடு அரசியல் வட்டாரங்களிலும், கட்சிக்குள்ளும் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், சில எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் பொதுவேட்பாளராக களமிறங்கும் வாய்ப்புகளையும் சீமான் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் ஒரு பகுதியாகவே அண்மையில் பல்வேறு அரசியல் தலைவர்களுடன் அவர் சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியுடனும், பல்வேறு அரசியல் தலைவர்களுடனும் சீமான் நட்புறவை வலுப்படுத்தி வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதேவேளை, திமுக தரப்புடனும் மீண்டும் தொடர்பு கொண்டதாக கூறப்படும் நிலையில், "தற்போது உங்கள் அரசியல் பணிகளைத் தொடர்ந்து செய்யுங்கள்; தேர்தல் நெருங்கும் போது முடிவு எடுக்கலாம்" என்ற பதில் கிடைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில், அம்பாசமுத்திரம் தொகுதியில் பூத் வாரியாக நிர்வாகிகளை நியமித்து தேர்தல் பணிகளை நாம் தமிழர் கட்சி தீவிரப்படுத்தியுள்ளதாகவும், விரைவில் ஆளுங்கட்சிக்கு எதிரான மக்கள் பிரச்சினை சார்ந்த போராட்டங்களையும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனினும், சீமான் எந்த கூட்டணியில் போட்டியிடுவார் அல்லது தனித்துப் போட்டியிடுவாரா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. தற்போதைக்கு வெளியாகியுள்ள தகவல்கள் அனைத்தும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் தகவல்களின் அடிப்படையிலானவை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is Seeman entering the fray for the Ambasamudram byelection NTK has already begun its groundwork


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->