2026 சட்டமன்ற தேர்தல்; தவெகவுடன் கூட்டணி வைக்க சசிகலா திட்டம்..?
Is Sasikala planning to form an alliance with the TVK for the 2026 assembly elections
2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து களமிறங்க வி.கே.சசிகலா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா, டிடிவி தினகரன், திவாகரன் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இதனையடுத்து டிடிவி தினகரன், அமமுக என்ற கட்சியையும், திவாகரன், அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியையும் தொடங்கினர்.
சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் சசிகலாவுக்கும், தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த 2022-ஆம் ஆண்டு திவாகரன் தனது கட்சியை சசிகலா தலைமையின் கீழ் கொண்டு வந்தார்.
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாததால், இந்த 2026 தேர்தலில் சசிகலா தன்னுடைய ஆதரவாளர்களை தனித்துப் போட்டியிட வைக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அல்லது சசிகலாவின் ஆதரவாளர்கள், திவாகரனால் தொடங்கப்பட்ட அண்ணா திராவிடர் கழக வேட்பாளர்களாக 25 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ஆம் தேதி, விக்கிரவாண்டி வி.சாலையில் சசிகலா பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது தனது இறுதி முடிவை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், மறுபுறம் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் வாயிலாக தவெக கூட்டணிக்கு செல்ல சசிகலா தரப்பு முயற்சிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Is Sasikala planning to form an alliance with the TVK for the 2026 assembly elections