சசிகலா காலில் விழுவது சுயமரியாதையா...? சீமானின் கூர்மையான விமர்சனம்...!
Is it self respect to fall at Sasikala feet Seemans sharp criticism
சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் “சுயமரியாதை என்றால் என்ன?” என்ற கேள்வியை எழுப்பி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் தாக்குதல்களை நிகழ்த்தினார்.
அந்த நிகழ்வில் பேசிய அவர், தீவிரமான வார்த்தைகளில் பின்வருமாறு கருத்து தெரிவியத்த்ததாவது,"துணை முதலமைச்சர் தன்னுடைய வயதுக்கு சமமான ஒருவரின் காலில் விழுவது தான் சுயமரியாதையா?
சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவி பெற்றது தான் சுயமரியாதையா?

திராவிடம் என்றால் ஆரியத்திற்கு எதிரான கோட்பாடு என்று கூறினார்கள். ஆனால் ஆரியரான ஜெயலலிதா திராவிடக் கட்சியின் தலைவராக ஆனது எப்படி?
ஜெயலலிதா தலைமையில் இருந்தபோது அ.தி.மு.க.வினர் யாராவது முன் நிமிர்ந்து பேசியதுண்டா?
கார் டயரையே கும்பிட்டு வணங்குவது தான் சுயமரியாதையா?
என் மாமனார் காளிமுத்து மட்டும் தான் ஜெயலலிதா முன் நிமிர்ந்து நின்று பேச துணிந்தவர்.அதனை தொடர்ந்து சீமான் சவாலாக தெரிவித்ததாவது,"சுயமரியாதை என்ற சொல்லையே உச்சரிக்க தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தகுதி பெற்றவர்களா?.இவ்வாறு சுயமரியாதையின் உண்மையான அர்த்தம் களைகட்டியிருக்கிறது என சீமான் தனது உரையில் வன்மையாக தெரிவித்தார்.
English Summary
Is it self respect to fall at Sasikala feet Seemans sharp criticism