நீலகிரிக்கு திமுக 10 கோடி கொடுத்ததா?! கொடுத்தது யார் தெரியுமா? திமுகவே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால், அந்த மாவட்டம் முழுமையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவினால் பல கிராமங்களில் பல வீடுகள், இருந்த சுவடே இல்லாமல் இழப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பும் அதிகளவில் இருக்கும் என அஞ்சப்படுகிறது. 

ஓரளவு மழை குறைந்த நிலையில் தற்போது நிவாரண பணிகளை முடுக்கி விடப்பட்டுள்ளது. மழையால். மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில், கோயில்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது திமுகவின் ராஜா. அவர் நேற்று முன்தினம் திமுக தலைவர் மு க ஸ்டாலின் உடன் நீலகிரி சென்றார். 

நேற்று திமுக தலைவர் மு க ஸ்டாலின், அங்கு என்ன சூழ்நிலை என்பதனை பார்வையிட்டார். அப்போது அங்கே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டு, திமுக சார்பில் 10  கோடி ரூபாய் நிவாரணமாக அளிக்கப்படும் என தெரிவித்திருந்தார். மேலும் அவர் அந்த நிவாரண நிதி எவ்வாறு அளிக்கப்படும் என்பதையும் தெரிவித்திருந்தார். 

"எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகமும் முனைப்பாக தன்னுடைய பங்கை செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் 3 கோடி ரூபாய், இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி அவருக்கென்று இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 2 கோடி ரூபாய், மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ராஜ்யசபா உறுப்பினர்கள் சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆலந்தூர் பாரதி, வில்சன் மற்றும் சண்முகம் ஆகியோர் ஆளுக்கு 1 கோடி ரூபாய் ஒதுக்கி ஒட்டுமொத்த நிதியையும் சேர்த்து சுமார் 10 கோடி ரூபாய் உடனடி நிவாரணப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட இருக்கின்றது" என அவர் தெரிவித்ததாக அவருடைய முகநூல் பக்கத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால் சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் திமுக 10 கோடி ரூபாய் வழங்கியதாக செய்திகள் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் உண்மையில் அங்கே வழங்கப்பட்ட 10  கோடி என்பது மக்களின் வரிப்பணத்திலிருந்து, மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தொகுதி வளர்ச்சி நிதி தான்  என்பது திமுகவின் அறிக்கையிலிருந்தே தெரியவந்துள்ளது. திமுக உறுப்பினர்கள் நிதியை வழங்கினாலும் அது அரசு பணம் தானே தவிர திமுகவின் பணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

திமுக கட்சி சார்பில் எவ்வித நிதியும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு வழங்கப்பட்ட நீதி என்பது மக்களின் வரிப்பணம் தான் என்பது திமுகவின் அறிக்கையிலேயே உறுதியாகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

is dmk gave relief fund 10 crores to nilgiris rains


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal