இந்தியா - பாகிஸ்தான் மகா யுத்தம்: கொழும்பில் உச்சகட்ட பாதுகாப்பு! - Seithipunal
Seithipunal


டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக உயரிய எதிர்பார்ப்பான இந்தியா - பாகிஸ்தான் இடையிலான "மகா யுத்தம்" இன்று இரவு கொழும்பில் நடைபெறுகிறது.

பாகிஸ்தான் அணி இப்போட்டியைப் புறக்கணிப்பதாக முதலில் அறிவித்திருந்தாலும், ஐசிசி-யின் சமரசப் பேச்சுவார்த்தை மற்றும் அந்நாட்டு அரசின் அனுமதியைத் தொடர்ந்து இந்த மோதல் உறுதியாகியுள்ளது.

தற்போது கொழும்பில் நிலவும் வானிலை மாற்றங்களால் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுவதால், மைதானத்தின் ஆடுகளம் தார்ப்பாய்களால் மூடப்பட்டுள்ளது. போட்டி மழைக்குத் தப்புமா என்பது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொருபுறம், இந்த முக்கியப் போட்டிக்காகக் கொழும்பு நகரம் முழுவதும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மைதானத்தில் நுழையும் ரசிகர்களுக்குத் தீவிர உடல் பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளதால், நெரிசலைத் தவிர்க்கப் போட்டி தொடங்குவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பே ரசிகர்கள் மைதானத்திற்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India vs Pakistan Clash High Security and Rain Threats Loom Over Colombo


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->