அதிமுக-விசிக கூட்டணி? திருமாவளவனுக்கு போன் போட்ட ஈபிஎஸ்! அதிர்ச்சியில் திமுக! - Seithipunal
Seithipunal


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியில் இதர பிற்படுத்தப்பட்டோர் அணி சார்பில் நடைபெற்ற சாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அவசியம் முக்கியத்துவம் என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார். 

அதன் பிறகு அவருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் விசிக தலைவர் திருமாவளவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்தார். 

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் திருமாவளவனை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்ததாக வெளியான தகவல்  அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை திருமாவளவன் வரவேற்று பேசி இருந்த நிலையில் தற்போது அதிமுக பொதுச் செயலாளர் நேரடியாக அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இருப்பது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர் வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் தமிழகத்தில் பல கட்சிகளின் கூட்டணி நிலைப்பாடுகள் மாறக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வரும் இந்த சூழலில் திருமாவளவனுடன் எடப்பாடி பழனிச்சாமி பேசியிருப்பது ஆதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Info EPS inquired about thirumavalavan health issues


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->