பெண்களின் திருமண வயதை உயர்த்த கூடாது., இஸ்லாமிய கட்சி போர்க்கொடி.! - Seithipunal
Seithipunal


நாட்டின் பிரதமைரையே 18 வயதில் அடைந்தால் தேர்வு செய்யும் உரிமை இருக்கும் போது, தனக்கான துணையை தேர்ந்தெடுக்க முடியாதா? என்று, இஸ்லாமிய கட்சியான ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக மாற்றுவதற்கான மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

மத்திய அரசின் இந்த முயற்சிக்கு பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள், பெண்பிள்ளையை பெற்றவர்களும் மிகுந்த வரவேற்பு அளித்து வருகின்றனர். அதே சமயத்தில் இஸ்லாமிய அமைப்புகள், கட்சிகள் மற்றும் ஒரு சில அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து, இஸ்லாமிய அரசியல் கட்சியான ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அவரின் அந்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது,

"ஒரு இந்திய குடிமகன் 18 வயதில்ஒரு தொழிலைத் தொடங்கலாம், நாட்டின் பிரதமரை தேர்வு செய்யலாம், மக்களவை உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கலாம். இப்படியிருக்க மத்திய அரசின் இந்த முடிவு தவறான ஒரு முடிவாகும்.

நான் ஏற்கனவே ஆண்களுக்கான திருமண வயதை 21 என்பதில் இருந்து 18 ஆக குறைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறேன். தற்போது மத்திய அரசு அதையும் அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் குழந்தைத் திருமணம் மத்திய அரசின் நடவடிக்கையால் குற்றவியல் சட்ட நடவடிக்கையால் குறைந்தபாடில்லை. கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றம் காரணமாக தான் இந்தியாவில் குழந்தைத் திருமணங்கள் குறைந்துள்ளது" என்று ஓவைசி மத்தியஅரசு மீது குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

INDIAN WOMAN MARRIAGE AGE ISSUE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->