#BREAKING:: அதிமுக பாஜக கூட்டணி நீடிக்குமா..? "எம்ஜிஆர் மாளிகையில் ஈபிஎஸ் அவசர ஆலோசனை"..!! - Seithipunal
Seithipunal


அதிமுக மகளிரினர் சார்பில் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் மகளிர் தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்ற நிலையில் தற்போது அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த கூட்டத்தில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சி.வி சண்முகம், ஆர்.பி உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, காமராஜ் மற்றும் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

ஏற்கனவே அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான நிலையில் நாளை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்து வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று கோவில்பட்டியில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவ படத்தை பாஜகவின் இளைஞரணி நிர்வாகிகள் எரித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அதிமுக பாஜக கூட்டணியில் விரிசல் விழ தொடங்கியுள்ளது. 

இந்த நிலையில் இன்று முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பாஜக கூட்டணி தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நாளை நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்திலும் அதிமுக பாஜக கூட்டணி குறித்து விரிவான ஆலோசனை நடைபெறும் எனவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Important consultation led by EPS on AIADMK BJP alliance


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->