தப்பு செஞ்சா தட்டி தூக்கிருவாங்க...! பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வரும் ‘சிங்கப்பெண்’ படை...! - இன்று முதல் அதிரடி தொடக்கம்...!
If you make mistake you hanged Lion Woman force coming ensure safety women Action starts today
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கும், பாதுகாப்பு உணர்வை வலுப்படுத்துவதற்கும் தமிழக அரசு உருவாக்கியுள்ள ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப் படை இன்று அதிகாரப்பூர்வமாக பணியைத் தொடங்குகிறது. முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே அறிவிக்கப்பட்ட இந்த முக்கியத் திட்டம், தற்போது செயல்பாட்டுக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த சிறப்பு அதிரடிப் படையின் முதல் பெண் உயரதிகாரியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் தலைமையில் ஒரு காவல் கண்காணிப்பாளர், 2 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 4 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட காவலர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்தப் படையில் பணியாற்றும் பெண் காவலர்கள் மற்றும் பெண் உதவி ஆய்வாளர்களுக்காக தனித்துவமான சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நீல நிற சட்டை, காக்கி நிற கால்சட்டை, கருப்பு நிற தொப்பி மற்றும் கருப்பு நிற காலணி ஆகியவை அவர்களுக்கான அடையாள சீருடையாக வழங்கப்பட்டுள்ளன.கடந்த மாதம் 29-ஆம் தேதி இந்த சிறப்புப் படையை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க இருந்த நிலையில், நிர்வாக காரணங்களால் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து இன்று மாலை 5 மணியளவில் சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சென்னையில் தொடக்க விழா நிறைவடைந்தவுடன், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிங்கப்பெண் அதிரடிப் படை தனது பாதுகாப்புப் பணிகளை விரிவுபடுத்த உள்ளது.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையின் முக்கியப் பொறுப்புகள்:
பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறை மற்றும் அத்துமீறல்களை தடுப்பது.
பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து பாதுகாப்பு மிக்க சமூகச் சூழலை உருவாக்குவது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நட்பான, பாதுகாப்பான சமூகத்தை மக்கள் பங்களிப்புடன் கட்டியெழுப்புவது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர் கண்காணிப்பு மற்றும் சுற்றுக்காவல் பணிகளை மேற்கொள்வது.
குற்றச்செயல்கள் நிகழ வாய்ப்புள்ள பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது.
காவலர்களின் தொடர்ச்சியான களப்பணிகள் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பாதுகாப்பு நம்பிக்கையை வளர்ப்பது.
பெண்கள் பாதுகாப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த சிறப்புப் படை, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு அமைப்பில் புதிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
If you make mistake you hanged Lion Woman force coming ensure safety women Action starts today