தமிழக அரசியலில் அடுத்த பூகம்பம்; அதிமுக - திமுக கூட்டணி உறுதியானால் 108 தவெக எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய திட்டம்..?
If an AIADMK and DMK Alliance Is Confirmed Are 108 TVK MLAs Planning a Mass Resignation
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. 108 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனாலும் 118 என்ற மேஜிக் தொகுதி இல்லாத காரணத்தினால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை தொடருகிறது.
தவெகவிற்கு காங்கிரஸின் ஐந்து எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்தும் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்காததால் அவர் ஆட்சி அமைக்க முடியாத சூழல் நிலவுகிறது.

இந்தச் சூழலில், திமுக, அதிமுக ஆகியவை தனித்தனியாக தங்களது எம்.எல்.ஏ.க்கள் கூட்டங்களை நடத்தின. இந்நிலையில், ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தொலைபேசி வாயிலாக ஒரு முக்கியப் பேட்டி அளித்துள்ளார்.
அதில், அவர் கூறியுள்ளதாவது; ''ஆட்சியமைக்கத் தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை அவசியம். அதன் பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆட்சியமைக்க உரிமை கோரி என்னை சந்திக்க வருவோரிடம் நான் கேட்பது ஒன்று தான். ஆட்சியமைக்கத் தேவையான உறுப்பினர்கள் உங்களிடம் உள்ளனரா என்பது தான்'' எனத் தெரிவித்துள்ளார்.
அப்போது அவரிடம், அதிமுக – திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து வந்து ஆட்சியமைக்க உரிமை கோரினால் அனுமதி கொடுப்பீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது;

அதற்கு அவர், அப்படி அவர்கள் வரும் போது அவர்களுக்கான எண்ணிக்கை இருக்கிறதா என்பதை பரிசீலனை செய்து முடிவெடுப்பேன். விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால், சூழல் அப்படி இல்லை. இன்று எண்ணிக்கையை கொண்டுவந்தால் நாளையே பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறேன். தவெக தலைவர் விஜயை நான் தடுக்கவில்லை'' எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில், திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைத்தால் தவெகவின் 108 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி யுள்ளமை தமிழக அரசியல் களத்தில் மற்றுமொரு பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
If an AIADMK and DMK Alliance Is Confirmed Are 108 TVK MLAs Planning a Mass Resignation