திமுகவை கண்டித்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர்.! - Seithipunal
Seithipunal


நகராட்சியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, திமுகவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் : சங்ககிரி உட்பட்ட இடங்கணசாலை நகராட்சியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் சித்தர்கோவில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது திமுகவை கடுமையாக விமர்சித்து கோஷங்களையும் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ முத்து தெரிவிக்கையில்,

"இடங்கணசாலை நகராட்சியில் எங்களுக்கு ஒரே ஒரு சீட்டு மட்டுமே திமுகவினர் ஒதுக்கி உள்ளனர். மேலும், துண்டுப் பிரசுரங்களில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களின் படங்கள் இடம்பெற வில்லை.

திமுகவின் இந்த செயலானது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இடத்தில் கூட, திமுகவினர் சுயேச்சையாக ஒரு வேட்பாளரை களமிறக்கி உள்ளனர். நாங்கள் கண்டிப்பாக இதற்கு பாடம் புகட்டுவோம்" என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாநில பொதுக் குழு உறுப்பினர் ராஜ முத்து, நகர தலைவர் சந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர் விஜயகுமார், மேற்கு மாவட்ட தொழிலாளர்  அணி செயலாளர் சிவசக்தி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IDANKANASALAI CONGRESS PROTEST


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal