அதிர்ச்சி தகவல்!!! எனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. என்ன செய்வது? - சித்தராமையா - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில முதல்வர் 'சித்தராமையா' தனக்கு மிரட்டல் கால்கள் வருவதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.மேலும், இது குறித்து சித்தராமையா தெரிவிக்கையில்,"எனக்கு கொலை மிரட்டல் உள்ளிட்ட மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளது. என்ன செய்வது?. காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.

இந்த மிரட்டல்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.ரவுடி சுஹாஸ் ஷெட்டி கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தெரியவில்லை.

கொலை செய்யப்பட்ட பிறகு நேற்று காவல்துறை அதிகாரியுடன் பேசினேன். சட்டம்-ஒழங்கு ஏடிஜிபி-யை மங்களுருக்கு அனுப்பி வைத்துள்ளோம். முன்கூட்டியே திட்டமிட்டதா? இல்லையா? என்பது தெரியவில்லை.

விசாரணை முழுமையாக முடிவடைந்த பின்னர், அதுகுறித்து தெரியவரும். அரசியல் செய்வதற்காக பாஜக எப்போதும் இதுபோன்ற சம்பவங்களை தேடிக் கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது, "பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தில் ஒரு காவலரோ அல்லது பாதுகாப்புப் படையினரோ கூட இல்லை என்று எனக்குச் சொல்லப்பட்டது.

பாதுகாப்பு இல்லை என்றால், என்ன அர்த்தம்? நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்கிறார்கள், அத்தகைய இடத்தில் காவலர்கள் இருக்க வேண்டாமா?" என்று கேள்வி எழுப்பினார்.பாதுகாப்பு குறைபாட்டால் தாக்குதல் நடத்தப்பட்டதா? என்ற கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I have received death threats What should I do Siddaramaiah


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->