யாருடன் கூட்டணி, எத்தனை சீட், எந்தந்த தொகுதி என்பதை இப்போ நான் சொல்ல முடியாது...!- பிரேமலதா விஜயகாந்த்
I cant say now who I alliance with how many seats and which constituency Premalatha Vijayakanth
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் 'பிரேமலதா விஜயகாந்த்', மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது,"விருத்தாச்சலம் தே.மு.தி.க.வுக்கு முதல் வெற்றியை கொடுத்த தொகுதி.

2026 ஜனவரியில் 9-ந்தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.எத்தனை சீட்,யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதி, எந்தந்த தொகுதி, யார் வேட்பாளர் என்று எல்லாம் நான் இப்போது சொல்ல முடியாது.
அதனை முழுவதும் வருகிற ஜனவரியில் தெரிவிக்க இருக்கிறேன்.எதிர்பாராதவிதமாக ஒரே ஓட்டலில் திருமாவளவனும் தங்கியிருந்ததாலும், அன்று அவருக்கு பிறந்தநாள் என்பதாலும் சுதீஷ் சென்று அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துவிட்டு, அவரின் சின்னம்மா இறந்ததற்கு ஆறுதல் தெரிவித்தார்.
2 ஜனாதிபதிகள் நம் தமிழ்நாட்டில் இருந்து உள்ளார்கள். துணை ஜனாதிபதிக்கு ஒரு தமிழருக்கு வாய்ப்பு கிடைக்கும்போது நிச்சயம் ஒன்றாக இணைந்து அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் இது தமிழ்நாட்டுக்கும் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைத்த பெருமையாக இருக்கும். பொறுத்து இருந்து பார்ப்போம்" என்று தெரிவித்திருந்தார்.
English Summary
I cant say now who I alliance with how many seats and which constituency Premalatha Vijayakanth