அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை எப்படி இருக்கு.? பெங்களூரு மருத்துவமனை விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காரில் பயணம் செய்தபோது ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி காரணமாக தருமபுரி மாவட்டம் காரியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோர் உடல்நிலை விசாரித்ததோடு அமைச்சர் அன்பில் மகேஷை உடனடியாக சென்னைக்கு விமானத்தில் அழைத்து வருமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர் பெங்களூர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

தர்மபுரியில் இருந்து சாலை மார்க்கமாக பெங்களூருவில் உள்ள நாராயண இருதய மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அமைச்சர் அன்பு மகேஷின் உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

நெஞ்சுவலி காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பூரண நலமுடன் இருப்பதாக நாராயணா மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் மாரடைப்பு தொடர்பான எந்த வித அறிகுறிகளும் இல்லை என மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hospital explan about Minister Anbil Mahesh health


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->