திருப்பரங்குன்றம் விவகாரம்: வரும் டிசம்பர் 07-இல் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்; இந்து முன்னணி அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து வரும் 07-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக இந்து முன்னணி மாநிலத்தலைவர்  காடேஸ்வரா சி.சுப்பிரமணீயம் அறிவித்துள்ளார்.

திருப்பூரில் இன்று செய்தியாளரிகளிடம் பேசிய போது மேலும் கூறியதாவது: 

கடந்த 02 நாட்களாக தமிழக அரசு மக்களின் பக்தியை அவமதித்து வருவதைக் கண்டிக்கிறோம் என்றும், உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் அதனை சிறிது கூட மதிக்காமல் அரசியல் சாசனத்துக்கு எதிராக காவல்துறை செயல்பட்டு வருகிறது என்று குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், திமுகவின் இந்து விரோத நடவடிக்கைகளை திசை திருப்ப பல்வேறு தில்லு, முல்லு வேலைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்றும் சாடியுள்ளார்.

மேலும், காவல்துறை நீதிமன்ற உத்தரவை அனுமதிக்காமல் முட்டுக்கட்டை போட்டு நடந்து கொண்டது கடமை தவறிய நடவடிக்கை என்றும், 1996-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் திருப்பரங்குன்றம் மலைமீது கோயில் நிர்வாகம் தீபம் ஏற்ற தீர்ப்பு வழங்கியது. 2014-ஆம் ஆண்டு நீதிமன்றம் மலை மீது எங்கும் தீபம் ஏற்றலாம். அதனை கோயில் நிர்வாகம் செய்யலாம் என்று கூறியது. 2015-ஆம் ஆண்டு தர்கா நிர்வாகம் மலையில் தீபம் ஏற்ற ஆட்சேபனை இல்லை என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாக நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத கோயில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையை எதிர்த்து தான் இப்போது வழக்கு நடந்து அதில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளார்.

மேலும், நீதிமன்ற விஷயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தவறான தகவலைச் சொல்கிறார் என்றும், மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லும் திமுக அரசு, விநாயகர் சதுர்த்திக்கு, தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில்லை என்பதோடு, மதச்சார்பின்மை என்று சொல்லிக்கொண்டு திமுக வேடம் போடுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாங்கள் மதக்கலவரத்தை தூண்டவில்லை. ஆனால், அங்கு எழுந்த சலசலப்புக்கும் போலீஸார் தான் காரணம் என்றும், தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. அதனை மறைக்கவே, திருப்பரங்குன்றத்தை திமுக அரசு கையில் எடுத்துள்ளது என்று பேசியுள்ளார்.

மேலும், திமுகவின் மக்கள் விரோத, சட்டவிரோத செயல்பாட்டை கண்டித்தும் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தியும் வரும் 07-ஆம் தேதி பக்தர்களை இணைந்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம், அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மதுரையின் வளர்ச்சியை யாரும் தடுக்கவில்லை. பல கோயில்களில் ஊழல்கள் நடந்துள்ளது. அதன்மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இந்து முன்னணி மாநிலத்தலைவர் தெரிவித்துள்ளார். அப்போது  மாநில செயலாளர் கிஷோர்குமார் உட்பட பலரும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hindu Munnani announces statewide protest on December 7 regarding Thiruparankundram issue


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->