தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு; செங்கோட்டையன், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!
High Court orders Sengottaiyan and Election Commission to respond in case challenging election victory
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதி தேர்தலில் செங்கோட்டையன் வெற்றி பெற்றதை எதிர்த்து, அதிமுக வேட்பாளர் தாக்கல் செய்த வழக்கில் அமைச்சர் செங்கோட்டையன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், ஈரோடு மாவட்டம் கோபி சட்டப்பேரவை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 16,620 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் என்.நல்லசிவத்தை தோற்கடித்து வெற்றிப்பெற்றார்.

செங்கோட்டையனின் இந்த வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி அதிமுக வேட்பாளர் வி.பி.பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். குறித்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 'தனக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என அமைச்சர் செங்கோட்டையன் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், அதனை ஏற்க மறுத்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், குறித்த வழக்கை இக்கட்டத்தில் தள்ளுபடி செய்ய முடியாது எனவும், வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பதை முடிவுசெய்த பிறகே தீர்மானிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்த தேர்தல் வழக்கு குறித்து அமைச்சர் செங்ககோட்டையன், தேர்தல் ஆணையம் ஆகியோர் 04 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 12-க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.
English Summary
High Court orders Sengottaiyan and Election Commission to respond in case challenging election victory