''நான் குற்றம் செய்யவில்லை; தவெக அரசு என்னை திட்டமிட்டு இந்த வழக்கில் இணைந்துள்ளனர்''; லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு பின் எ.வ.வேலு குற்றச்சாட்டு..! - Seithipunal
Seithipunal


''முறைகேடு வழக்கில் தவெக அரசு என்னை திட்டமிட்டு இந்த  இணைந்துள்ளனர்'' என திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கு தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜரானார்.

அவரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கிட்டதட்ட 05 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். அதன் பின்னர், லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது;

சிங்கப்பூர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, காலை சுமார் 10.45 மணியளவில் இங்கு வந்தேன் என்றும், விசாரணை அதிகாரி காலை 11 மணிக்கு, பல்வேறு கேள்விக் கணைகளை முன்வைத்தார். எனக்கு மனதில் பட்ட உண்மைகளை அவரிடம் சொல்லியுள்ளேன் என்றும், காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும், நீதிமன்றத்தின் ஆணையை ஏற்று, பதில் சொல்லியுள்ளதாகவும், தான் எந்தவித குற்றமும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

அத்துடன், ''எனக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு தயார்'' என அவர்களிடம் (லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள்) சொல்லியுள்ளதாகவும்,  தவெக அரசு திட்டமிட்டு இந்த வழக்கில் தன்னை இணைந்துள்ளதாக குற்றம் சுமத்தி பேசியுள்ளார்.

மேலும், நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் வெளியில் சில விஷயங்களை சொல்ல முடியாது என்றும், வரும் 28-ஆம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. அதனால் நீதிமன்றத்தில் நீதியை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறேன் என்று எ.வ.வேலு செய்தியாளர்கள் முன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

After the Anti Corruption Bureau investigation EV Velu says that the TVK government was deliberately involved in the corruption case


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->