மது போதையில் தள்ளாடி, தள்ளாடி வந்த பாஜக தலைவர் 'லேண்ட்' ஆகிய வீடியோ வைரல்.! - Seithipunal
Seithipunal


குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதிவேற்றதைக் கொண்டாடும் விதமாக, குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பாஜகவை சேர்ந்த மாவட்ட தலைவர் ஒருவர், மது போதையில் பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராக பதிவேற்றதைக் கொண்டாடும் வகையில், குஜராத் மாநிலம், சோட்டாடேபூர் பகுதியில், பாஜக சார்பாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில், அந்த மாவட்டத்தின் பாஜக தலைவர் ரஷ்மிகாந்த் வாசவா மது அருந்திவிட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றதாக சொல்லப்படுகிறது.

மேலும் அவர் பெண்களுக்கு மத்தியில் தள்ளாடியபடி அமர்ந்திருந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் பாஜக மகளிர் அணியை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் ஊர்வலமாக வந்த போது, பாஜக மாவட்ட தலைவர் ரஷ்மிகாந்த் வாசவா தள்ளாடி, தள்ளாடி நடந்து வந்ததும் அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.

அமர்ந்தபடியே ரஷ்மிகாந்த் வாசவா தூங்குவதும் அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளது.  இந்த காணொளி வைரல் ஆகவே ரஷ்மிகாந்த் வாசவாக்கு கடும் கண்டனாங்க எழுந்து வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

hhota Udepur BJP head viral video Gujarat 


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->