கனமழை பாதித்த நெல் கொள்முதல் நெருக்கடி – மத்திய அரசுக்கு எதிராக டெல்டாவில் கூட்டணி கட்சிகள் மாபெரும் ஆர்ப்பாட்டம்! - Seithipunal
Seithipunal


டெல்டா மாவட்ட விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை புறக்கணித்த மத்திய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளை கண்டித்து, ‘மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ கட்சிகள் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.சமீபத்திய கனமழையால் நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரித்த நிலையில், கொள்முதல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் என்ற தமிழ்நாட்டின் வலியுறுத்தலை மத்திய அரசு நேரடியாக நிராகரித்துள்ளதாக அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கனமழையால் சீரழிந்த பயிர்களுக்கு உரிய நிவாரணமும் வழங்கப்படாததால், டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் ஆபத்துக்கு உள்ளாகியுள்ளது எனவும் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு முழுக்க எழுந்த கோரிக்கைக்கு பிரதமர் கவனம் செலுத்தாமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்துவதாகவும், விவசாயிகளின் வேதனையை புரியாத மத்திய அரசு தங்கள் நியாய உரிமைகளை மறுக்கும் நிலையில் இருப்பதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.

இதற்கெதிராக, மத்திய அரசு உடனடியாக தன் முடிவை மறுபரிசீலனை செய்து, டெல்டா வேளாண் பெருங்குடிகளுக்கு தகுந்த நன்மை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், ‘மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ சார்பில் நவம்பர் 23, 2025 அன்று தஞ்சாவூரிலும், நவம்பர் 24, 2025 அன்று திருவாரூரிலும், காலை 10 மணி முதல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளன.இவ்வாறு கூட்டணி கட்சிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Heavy rains affect paddy procurement crisis coalition parties hold massive protest Delta against central government


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->