கனமழை எச்சரிக்கை! அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு!
Heavy rain warning AIADMK protest postponed
அ.தி.மு.க. தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை பயன்படுத்தி தி.மு.க.வினர் ஆட்சிச் சக்தியை துஷ்பிரயோகம் செய்து வருகிறார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதை கண்டித்தும், தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராகவும், அ.தி.மு.க. சார்பில் இன்று எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் பெரியளவு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது.

ஆனால், சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்ததையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மாற்றிய தேதியாக 20ம் தேதி அதே ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Heavy rain warning AIADMK protest postponed