இந்துக்கள் கொல்லப்பட்ட போது திமுக எங்கே போனது.?  ஸ்டாலினை சீண்டும் எச்.ராஜா! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தில் செல்போன்கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெண்ணிக்ஸ் காவல்துறையினரால் கொலை செய்யப்பட்டனர். இந்த விஷயம் விஸ்வரூபம் எடுத்து பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியது. மேலும், இருவரின் இழப்பிற்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கு தொடர்பான விசாரணையை மதுரை நீதிமன்றம் விசாரணை செய்து வந்த நிலையில், காவல் துறை அதிகாரிகள் ஒருமித்த கருத்தால் நீதிபதியை அவதூறு பேசி சர்ச்சையை அதிகரித்தனர். இதனை விசாரணை வாக்குமூலத்தில் நீதிபதியும் குறித்துக்கொண்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சி.பி.சி.ஐ.டி வசம் மாற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில்," #JayarajAndFenix கொலையில் மக்கள், அரசியல் கட்சிகள், வணிகர்கள், ஊடகங்கள், நீதிமன்ற அழுத்தத்தினால் #TNGovt சிக்கிக் கொண்டது.
 
சில கைதுகளுடன் தப்பிவிடலாம் என அரசு தப்புக்கணக்கு போடக் கூடாது. இனிதான் கடமை தொடங்குகிறது. கண்காணிப்பும் தொடர்கிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்" என கூறியிருந்தார்.
 
இந்த பதிவிற்கு பாஜக மூத்த தலைவர் எச் ராஜா, "குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால் திருப்புவனம் இராமலிங்கம் முஸ்லீம்களால்  கொல்லப்பட்ட போது எங்கே போனது திமுக. 
 
இந்துக்கள் என்றால் கொல்லப்பட வேண்டியவர்கள் என்பது தானே நீங்கள் மேலே குறிப்பிட்ட அனைவரது கொள்கையும். தேர்தல் வரட்டும்" என பதிலளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

h raja raising questions about chathankulam death to stalin


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->