உறுதி! அதிமுக ஆட்சி அமைந்ததும் தூத்துக்குடிக்கு வர்த்தக ரீதியான அனைத்து திட்டங்களும் அமையும்! - எடப்பாடி பழனிச்சாமி
Guaranteed Once AIADMK government formed all commercial projects implemented for Thoothukudi Edappadi Palaniswami
எதிர்கட்சித் தலைவரும்,அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ''எடப்பாடி பழனிசாமி'' சட்டமன்ற தேர்தளுக்காக 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்'' என்ற முழக்கத்தோடு மாவட்ட வாரியாக பிரசாரம் செய்து வருகிறார்.அதன் அடிப்படையில் இன்று தூத்துக்குடியில் உப்பு உற்பத்தியாளர்கள்,கப்பல் தொழிலளார்கள், நிறுவனத்தார், மீன்பிடி தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர்களை நேரில் சந்தித்து உரையாடினார்.

அப்போது அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.தூத்துக்குடியில் வர்த்தக மையம் அமைக்க வேண்டும் என மக்களிடையே கோரிக்கை எழுந்தது.
எடப்பாடி பழனிச்சாமி:
இதற்கு பதிலத்த எடப்பாடி பழனிச்சாமி,"அ.தி.மு.க. ஆட்சி அமைந்தததும் அதற்கான பணியை செய்வோம்.தூத்துக்குடியில் போக்குவரத்து அதிகளவு உள்ளதால் வி.வி.டி. சிக்னல் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் நீதிமன்ற வழக்கு காரணமாக அது நிலுவையில் உள்ளது. ஆனால் இதற்கு தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு பெற்று வி.வி.டி. சிக்னல் பகுதியில் மேம்பாலம் கட்டப்படும்.மேலும், பனைத்தொழிலாளர்களுக்கு அரசு உதவி, உப்பளத்தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும்.
கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை நான்தான் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தேன். அப்போது கிராமம், நகரம் என அனைத்து இடங்களிலும் தரமான சாலை அமைக்கப்பட்டது. இந்தியாவிலேயே தார்சாலைகள் அதிக நீளமுடையது தமிழ்நாட்டில் தான் என்ற நிலையை கொண்டு வந்தோம்.
எங்களது ஆட்சி காலத்தில் மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துறை மந்திரியாக இருந்த நிதின்கட்கரியிடம் பேசி தூத்துக்குடி துறைமுகம் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படியே தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டது.அதேபோல் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத்திற்காகவும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் 12 சாலைகளுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டு நிலம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதைபோல பல்வேறு சாலைகள் வர அ.தி.மு.க. ஆட்சி தான் காரணம்" என்று தெரிவித்தார்.இது தற்போது தூத்துக்குடி மக்களிடையே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Guaranteed Once AIADMK government formed all commercial projects implemented for Thoothukudi Edappadi Palaniswami