பாஜகவால் நிராகரித்த ஆளுநர்! பேரணி சென்ற ஆளும் கட்சியினர்! - Seithipunal
Seithipunal


ஆப்ரேஷன் தாமரையால் அப்செட்டான ஆம் ஆத்மி! சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடரை ரத்து செய்த பன்வாரிலால் புரோகித்!

நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளின் எம்எல்ஏக்களிடம் பேரம் பேசி தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடுவதை ஆபரேஷன் தாமரை திட்டம் என்ற பெயரில் பரவலாக பேசப்படுகிறது. இதே யுத்தியை பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களிடம் செயல்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

டெல்லியிலும் இதே போன்று ஆபரேஷன் தாமரை திட்டம் செயல்படுத்தியது பாஜக அப்பொழுது டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபித்து காட்டினார். அதே போன்று பஞ்சாப் முதல்வரும் பெரும்பான்மை நிரூபிக்க முயற்சித்துள்ளார்.

பாஜகவின் இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த் மான் முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இந்த தகவலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் அனுப்பி இருந்தார். 

பஞ்சாபில் எதிர்க்கட்சியான பாஜக இப்படி ஒரு சட்டம் பஞ்சாபில் இல்லை எனவும் பெரும்பான்மை நிருபிக்க மட்டும் ஒரு சட்டமன்றத்தை கூட்ட முடியாது என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகிதத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியது. இதனால் சுதாரித்துக் கொண்ட ஆளுநர் கடைசி நேரத்தில் கூட்டுத்தொடரை நடத்தும் உத்தரவை திரும்ப பெற்றார்.

ஆளுநரின் இத்தகைய முடிவிற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினர் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி சென்றனர். ஆளுநர் மாளிகைக்கு சிறிது தூரம் முன்பே ஆளும் கட்சி எம்எல்ஏக்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அங்கேயே உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

மக்களிடம் நேரடியாகச் சென்று ஓட்டு பெற்று வெற்றி பெற முடியாத பாஜக குறுக்கு வழியில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை அமைக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Governor rejected by BJP and The ruling party went to the rally


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->