மகளை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தவனை., நீதிமன்றத்திலேயே சுட்டுக்கொலை செய்த தந்தை.! - Seithipunal
Seithipunal


மகளை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபரை, நீதிமன்ற வளாகத்தில் வைத்தே துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்த தந்தையைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

பீகார் மாநிலம், முசாபர்பூர் நகரை சேர்ந்தவர் தில்ஷாத் ஹுசைன். இவர் நேற்று கோரக்பூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை ஒன்றுக்காக வந்துள்ளார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்து அவரை, திடீரென நபர் ஒருவர் அவரின் தலையில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தார்.

நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், துப்பாக்கி சூடு நடத்திய நபரை வளைத்துப் பிடித்து கைது செய்தனர். 

போலீசாரின் விசாரணையில், படுகொலைசெய்யப்பட்ட தில்ஷாத் ஹுசைன் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்தது. மேலும், அவரை சுட்டுக் கொன்ற நபர் பகவத் நிஷாத் என்பவர் ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவத்தின் பின்னணி காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணையில்,

ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் பகவத் வீட்டின் அருகே சைக்கிள் கடை வைத்திருந்தவர் தான் இந்த தில்ஷாத் ஹுசைன். 

பகவத் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து கடந்த 2020 ஆம் ஆண்டு சிறுமியான அவரின் மகளை ஹுசைன் கடத்தி சென்றுள்ளார். 

கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஹைதராபாத்தில் வைத்து போலீசார் ஹுசைனை கைது செய்தனர். மேலும் அவர் கடத்தி வைத்திருந்த தனது மகளையும் போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.

ஹுசைன் சிறுமிக்கு தொடர் பாலியல் செய்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து ஹுசைன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமினில் ஹுசைன் வெளிந்துள்ளதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, நேற்று நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த குற்றவாளி தில்ஷாத் ஹுசைனை சுட்டுப் கொலை செய்துள்ளார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gorakhpur Rape accused shot dead


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->