ஆபரணத் தங்க விலை மீண்டும் உயர்வு!
Gold prices rise again
சென்னையில் ஆபரணத் தங்க விலை மீண்டும் உயர்வை கண்டுள்ளது. வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.560 உயர்ந்து தங்கம் ரூ.90,000-க்கு விற்பனையாகி வருகிறது.
முன்னதாக செவ்வாய்க்கிழமை தங்க விலை திடீரென பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.90,000-க்கு விற்பனையாகி இருந்தது. அதன் பின்னர் புதன்கிழமையும் விலை சரிவு தொடர்ந்தது. அப்போது கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.11,180-க்கும், பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.89,440-க்கும் தங்கம் விற்பனையானது. இதனால் இரண்டு நாள்களில் மொத்தமாக பவுனுக்கு ரூ.1,360 வரை குறைவு பதிவாகி இருந்தது.
இந்நிலையில், வியாழக்கிழமை (நவம்பர் 6) தங்க விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.11,250-க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.90,000-க்கும் விற்பனையாகி வருகிறது.
இவ்வாறு தங்க விலை குறைந்து மீண்டும் உயர்வை பதிவு செய்ததால் வியாபாரிகளும் நகைக்கடை வாடிக்கையாளர்களும் ஆச்சர்யமடைந்துள்ளனர். சந்தையில் விலை மாற்றம் சர்வதேச தங்க விலைகளின் ஏற்றத்தாழ்வும், டாலர் மதிப்பும், முதலீட்டு தேவை அதிகரிப்பும் காரணமாக ஏற்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதே நேரத்தில் வெள்ளி விலையும் உயர்வை கண்டுள்ளது. கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.164-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,000 உயர்ந்து ரூ.1.64 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.