அதிமுகவில் இணைந்த முக்கிய புள்ளி.!! அதிர்ச்சியில் ஜி.கே வாசன்.!! - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலை சந்திக்கும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் அதிகார பூர்வமாக அறிவித்தார்.

ஆனால் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததில் பல தமாகா நிர்வாகிகளுக்கு உடன்பாடில்லை. பாஜகவுடன் கூட்டணி என அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சேலத்தில் உள்ள நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இந்த அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது நிலையில் மரியாதை நிமித்தமாக மட்டுமே எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்ததாக யுவராஜா அறிக்கை மூலம் விளக்கம் அளித்தார்.

இந்த பரபரப்பு சற்று ஓய்ந்த சூழலில் இன்று சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமையிலா தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் அதிமுகவில் இணைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GKVasan TMC district secretary joined in AIADMK


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->