தமிழக அரசு வீடுகளை இழந்திருப்பவர்களுக்கு தற்காலிக வீடும், நிரந்தர வீடும் ஏற்பாடு செய்ய வேண்டும்.. ஜி கே வாசன்.!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு குடிசைமாற்று வாரிய வீடுகளை இழந்திருப்பவர்களுக்கு தற்காலிக குடியிருப்பிற்கும், மேலும் நிரந்தர குடியிருப்பிற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று காலை சென்னை , திருவொற்றியூர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட வீடுகள் இடிந்து விழுந்த செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். ஏழை , எளிய மக்களுக்காக அளிக்கப்பட்ட குடிசை மாற்று வாரிய வீடுகள் உரிய தரத்தோடு இல்லாமல் 25 ஆண்டுகளை கடந்த நிலையில் இடிந்துள்ளது . 

அதிஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் இல்லை. வீடுகளை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு விரைவில் வீடுகள் ஒதுக்க வேண்டும். இந்நிலையில் தமிழக முழுவதுமுள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளை ஆய்வு செய்து அதற்கு ஏற்ப வீடுகளின் உறுதித்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். 

தற்பொழுது வீடுகளை இழந்திருக்கும் குடும்பத்தினருக்கு அரசு உடனடியாக அவர்கள் வசிப்பதற்கு தற்காலிக குடியிருப்பு வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். எனவே தமிழக அரசு , அரசின் சார்பில் பொது மக்களுக்கு கட்டித்தரும் கட்டடம் உ உறுதியாக இருப்பதற்கும், பாதுகாப்பான குடியிறுப்பிற்கும் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gk vasan statement on dec 27


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->