வேகமாக பரவும் கொரோனாவின் 3-வது அலை.. டாஸ்மாக் கடைகளை அரசு மூட வேண்டும்.! ஜி கே வாசன் வலியுறுத்தல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் நேற்று 28,561 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 42 ஆயிரத்து 796 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பு விகிதம் 18.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

சென்னையில் நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 2196 பேருக்கும், கோவையில் 3,390 பேருக்கும், கன்னியாகுமாரியில் 1148 பேருக்கும், திருவள்ளூரில் 998 பேருக்கும், திருப்பூரில் 897 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 736 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா மூன்றாம் அலை மிக வேகமாக பரவி வருவதன் காரணமாக, டாஸ்மாக் கடைகளை அரசு உடனே மூட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா மூன்றாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. மக்கள் அலட்சியப்படுத்தக் கூடாது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மக்கள்,அரசு கூட்டு முயற்சியால் தான் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரமுடியும். டாஸ்மாக் கடைகளையும் அரசு மூட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gk vasan says about close tasmac


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->