தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் CM சார்...! - முதலமைச்சர் விஜய்க்கு பிரேமலதா விஜயகாந்த் விடுத்த முக்கிய வேண்டுகோள் என்ன...?
Give importance Tamil CM sir What main request made by Premalatha Vijayakanth Chief Minister Vijay
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. அப்போது, புதிய சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
துணை சபாநாயகராக ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டார்.புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஜே.சி.டி. பிரபாகரை அவை முன்னவரும், எதிர்க்கட்சி தலைவரும் இணைந்து சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, அனைத்து கட்சிகளையும் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் புதிய சபாநாயகருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.அப்போது பேசிய தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்ததாவது,"இந்த சட்டப்பேரவை தமிழ்நாட்டின் உயரிய ஜனநாயக அவையாக திகழ்கிறது.
முன்னாள் முதலமைச்சர்கள் பலரும் இந்த அவையில் சிறப்பான ஆட்சித் திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.சபாநாயகர் ஆணாக இருந்தாலும், தாயின் பாசத்துடன் அனைத்து உறுப்பினர்களுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்க வேண்டும்.திரைத்துறையில் விஜய்க்கு அண்ணனாக விளங்கியவர் விஜயகாந்த்.
விஜயகாந்த் விரும்பியபடி, சட்டப்பேரவையின் அனைத்து நிகழ்வுகளும் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பப்பட வேண்டும்.இனி தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு மற்றும் பொதுநிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிட மரியாதை வழங்கப்பட வேண்டும்.
தமிழ்த்தாய் வாழ்த்தை உயர்ந்த இடத்தில் நிலைநிறுத்த வேண்டும் என்று முதலமைச்சர் விஜயிடம் அவர் வலியுறுத்தினார்.
English Summary
Give importance Tamil CM sir What main request made by Premalatha Vijayakanth Chief Minister Vijay