உத்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் மறைவு.. 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் முலாய் சிங் யாதவின் மறைவையொட்டி 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

முலாயம் சிங் யாதவ் சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் ஆவார். இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத பெரிய தலைவர். உத்தரப் பிரதேச முதல்வராக 3 முறை பதவி வகித்துள்ளார். 1989 முதல் 91 வரை, பின்னர் 1993 முதல் 95 வரை, பிறகு 2003 முதல் 2007 வரை அவர் முதல்வராக இருந்துள்ளார். 

முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம் சிங் யாதவ். தற்போது அசம்கர் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக 1996 முதல் 1998 வரை இருந்துள்ளார்.

உ.பி சட்டசபைக்கு 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி கண்டவர் முலாயம் சிங். உபியில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வருபவர். தற்போது ஆறாவது முறையா அவர் லோக்சபா எம்.பியாக பதவி வகித்து வருகிறார். 

இந்த நிலையில் உடல்நிலை குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக  தொடர்ந்து தகவல் வெளியாக வந்த நிலையில் தனது 83 வது வயதில் இன்று காலமானார். 

இவருடைய மறைவையொட்டி அரசியல் கட்சியினர் பலத்துறை பிரபலங்கள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், இவருடைய மறைவையொட்டி உத்திரபிரதேச மாநிலத்தில் 3 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former Uttar Pradesh CM Mulayam Singh Yadav passed away 3 days of mourning


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->