தேர்தல் சூட்டில் நிதி அறிக்கை: இடைக்கால பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு...! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு 2026–2027 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை, சட்டசபையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து அரசின் நிதி முன்னுரிமைகளை விளக்கினார். 2021 மே 7 அன்று பொறுப்பேற்ற தற்போதைய ஆட்சியின் கடைசி சட்டமன்ற கூட்டத் தொடராக இந்த அமர்வு அமைந்துள்ளது.

மேலும், சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், புதிய அரசு மே மாதத்தில் பதவியேற்க உள்ளது. இதனால், முழுமையான ஆண்டு பட்ஜெட்டிற்கு பதிலாக தற்காலிக நிதி நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில் இடைக்கால பட்ஜெட் மட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள், வளர்ச்சி பணிகள் மற்றும் அரசு திட்டங்கள் இடையூறு இல்லாமல் தொடர தேவையான நிதி ஒதுக்கீடுகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.தேர்தலுக்குப் பிறகு பதவியேற்கும் புதிய அரசு, தனியாக விரிவான பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்தி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

அதன்பின் துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மூலம் நிதி ஒதுக்கீடுகள் உறுதி செய்யப்படும்.இதற்கிடையில், ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெறலாம் என்ற சூழ்நிலையில், இந்த இடைக்கால பட்ஜெட் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது.

கடும் போட்டி நிலவும் இந்த தேர்தல் காலத்தில், மக்களின் ஆதரவை ஈர்க்கும் புதிய அறிவிப்புகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும், நிதி அறிக்கையைத் தொடர்ந்து, வேளாண்துறைக்கான தனி நிதி திட்டமாக வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டசபையில் முன்வைக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Finance report heat elections Minister Thangam Thennarasu presented interim budget assembly


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->