டிஜிட்டல் கைது மோசடியில் திடீர் திருப்பம்...! ரூ.30 ஆயிரம் கோடி மோசடி கும்பலை சேர்ந்த 2 பேர் கைது...! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் இணையவழி குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

குறிப்பாக, பொதுமக்களை குறிவைத்து நடைபெறும் போலி தொலைபேசி அழைப்புகள், அச்சுறுத்தல்கள் மற்றும் ‘டிஜிட்டல் கைது’ எனப்படும் மோசடி சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், கடந்த ஆண்டு கோவாவை சேர்ந்த பெண் ஒருவர் இணையவழி மோசடி கும்பலிடம் ரூ.2.60 கோடியை இழந்துள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது.

இந்த வழக்கின் விசாரணையின்போது, நாடு முழுவதும் ‘டிஜிட்டல் கைது’ மற்றும் பல்வேறு இணையவழி மோசடிகளை அரங்கேற்றி வந்த மிகப்பெரிய கும்பல் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கும்பல் மூலம் நாடு முழுவதும் சுமார் ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, ‘டிஜிட்டல் கைது’ மோசடி தொடர்பாக மும்பையை சேர்ந்த பஹிம் மொயின் ஹசன் சயது மற்றும் நயிம் மொயின் சயது ஆகிய 2 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

இந்த மோசடி கும்பலின் செயல்பாடுகள் குறித்தும், இதில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கும்பலில் தொடர்புடையதாக கூறப்படும் எஞ்சிய நபர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sudden twist digital arrest scam 2 members 30000 crore fraud gang arrested


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->