பிப்ரவரி 14 ஆம் தேதி விடுமுறை.. அரசு அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஐந்து மாநில சட்டமன்றத் தேதியை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. 

அதன்படி, உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தல் வருகிற பிப்ரவரி 10-ஆம் தேதியும், 7 ஆம் கட்ட தேர்தல் மார்ச் மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. உத்தரகாண்ட், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 

மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 27ஆம் தேதி முதற்கட்ட தேர்தலும், மார்ச் 3 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், சட்டமன்ற தேர்தலை ஒட்டி வருகின்ற 14-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தல் வருகிற 14-ஆம் தேதி நடைபெற உள்ளதால் அன்றைய தினம் பொது மக்கள் வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

feb 14 local holiday for goa


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->