தலைநகர் டெல்லியில் திடீர் பரபரப்பு., குவிக்கப்பட்ட போலீசார்.! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லி: பாராளுமன்றம் அருகில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் குவிக்கப்பட்டு இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தலைநகர் டெல்லியில், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைநகர் டெல்லியில் எல்லைகளை முற்றுகையிட்டு பெரும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். விவசாயிகளுடன் 10 க்கும் மேற்பட்ட முறை மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியும், விவசாயிகளுடன் எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில், மத்திய அரசின் புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.

இந்த சூழ்நிலையில், கடந்த 19ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. இதனைப் பயன்படுத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக, நாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில், விவசாயிகள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நோய் பரவலை காரணம்காட்டி டெல்லி போலீசார் விவசாயிகளின் போராட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் தற்போது ஆர்ப்பாட்டத்தை தொடங்கி உள்ளனர். 

விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால், போலீசார் 200க்கும் மேற்பட்டோர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது போல், விவசாயிகள் அத்து மீறி போராட்டத்தில் ஈடுபடாமல் இருப்பதை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் எடுத்துள்ளனர்.

மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் விவசாயிகள் முற்றுகையிடும் போராட்டத்தை முன்னெடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

farmer protest in jandar mnathar july


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->