பாஜக எதிர்பாராத தோல்வி.! விடுத்த சவாலில் தோற்றதால் பிரபல இயக்குனர் எடுத்த அதிரடி முடிவு!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நேற்று காலை 8 மணிக்கு நாடாளுமன்ற தேர்தலின்  வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது. இதில் இந்திய அளவில் பாஜக கூட்டணி 350 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 92 இடங்களிலும், பிற கட்சிகள் 100இடங்களிலும் வெற்றி பெற்றது. இருப்பினும் பாஜக எதிர்பார்த்த சில இடங்களில் பெரும் தோல்வி அடைந்திருந்தது.

இந்நிலையில் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டவர் கும்மனம்ராஜசேகரன். இவருக்கு ஆதரவாக கேரள சினிமாவின் முன்னணி இயக்குனரான அலி அக்பர் பிரசாரம் மேற்கொண்டபோது கும்மனம்ராஜசேகரன் தோல்வியடைந்தால் நான் மொட்டை அடித்துக்கொள்கிறேன் என கூறியிருந்தார். 

இந்நிலையில் நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் கும்மனம்ராஜசேகரன் தேல்வியடைந்தார். இதனைத்தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் அவர் கூறியதை கிண்டல் செய்து சமூகவலைத்தளங்களில் பரப்பினர்.  இந்நிலையில் அந்த சவாலை ஏற்ற  அலி அக்பர் இன்று மொட்டையடித்து அந்த புகைப்படத்தை தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். 

மேலும் அதில், சபதம் எடுத்ததால் அதை நிறைவேற்ற நான் மொட்டையடித்துள்ளேன். திருவனந்தபுரத்தில் பாஜ வேட்பாளர் கும்மனம் ராஜசேகரன் தோல்வியடைந்தது எனக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. என பதிவிட்டுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

famous director shaved head for bjp falilure


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal