உற்சாகம்! வெற்றியை நோக்கி செல்கிறது 'ஓரணியில் தமிழ்நாடு'...! - முதலமைச்சர்
Excitement Oraniyil Tamil Nadu is heading towards victory Chief Minister
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளதாவது," 50 லட்சம் உறுப்பினர்களைக் கடந்து, 'ஓரணியில் தமிழ்நாடு' மாபெரும் வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது!

இன்று காலை, திருவாரூரில் தலைவர் கலைஞர் வாழ்ந்த சந்நிதி தெருவில், நானும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டேன்! தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்று வரும் இந்த முன்னெடுப்பில், 54,310 புதிய உறுப்பினர்களையும் 30,975 குடும்பங்களையும் கழகத்தில் இணைத்து முதல் இடத்தில் முந்தி இருக்கிறது.
திருச்சுழி சட்டமன்றத் தொகுதி! மாவட்டக் கழகச் செயலாளர் தென்னரசு உள்ளிட்ட கழக நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்! திருச்சுழியை முந்திச் செல்ல, களத்தில் பணியாற்றும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்!
உங்கள் அனைவரது உழைப்பால் நம்முடைய இலக்கை நிச்சயம் எட்டுவோம்! வெற்றி விழாவில் சந்திப்போம்! " என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Excitement Oraniyil Tamil Nadu is heading towards victory Chief Minister