ஸ்டாலினை எதிர்த்து பேசிய, திமுக முன்னாள் எம்.பி., பாஜகவில் இணைந்தார்.! அதிகாரபூர்வ அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


திமுகவிலிருந்து அண்மையில் நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி, கேபி ராமலிங்கம் இன்று அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கேபி ராமலிங்கம் முக அழகிரியின் ஆதரவாளர் ஆவார்.

தமிழக அரசை ஆதரித்தும், திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்தும் பேசியதால் திமுகவிலிருந்து அண்மையில் ராமலிங்கம் நீக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அனைவரும் தமிழன் தமிழகம் வரும் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. 

திமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஒரு முன்னாள் எம்பி ராமலிங்கம் அமித்ஷாவை சந்திப்பதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் பாஜகவில் இணைய உள்ளாரா? அல்லது முக அழகிரியின் தூதுவராக மத்திய அமைச்சரவை சந்திக்கிறாரா? என்று பல்வேறு சந்தேகங்கள் கிளம்பி இருந்தது.

இதற்கிடையே, இன்று காலை தமிழக பாஜக பொறுப்பாளர் சிடி ரவியை, திமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி ராமலிங்கம் சந்தித்து பேசினார். இந்நிலையில், முன்னாள் எம்பி ராமலிங்கம் பாஜகவில் இணைய உள்ளதாக பாஜக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ex mp joint to bjp


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->