#Breaking:: கமலஹாசனிடம் ஆதரவு கேட்கும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு கடந்த இரண்டு நாட்களாக நிலவி வந்த நிலையில் நேற்று மாலை அதிகாரப்பூர்வமான வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் சஞ்சய் சம்பத்திற்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் தலைமை ஈ.வி.கே.ஸ் இளங்கோவனை வேட்பாளராக அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை திமுக தலைவர் மு.க ஸ்டாலினை காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவினர் பிரச்சாரம் செய்ததற்கு நன்றி தெரிவிக்க முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்தேன். இதனைத் தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணியின் அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவுக்கு கோர உள்ளேன். 

அதேபோன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசனை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். அவர் நேரம் ஒதுக்கும் பட்சத்தில் அவரை சந்தித்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கோர உள்ளேன்" என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி நடிகர் கமலஹாசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுள்ளார். மேலும் ஈரோடு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் கமல்ஹாசனை காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணியில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

EVKS Elangovan ask Kamal Haasan support in erode East byelection


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->