"பெரியார் பிறந்தநாள் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது": தவறான செய்திகளுக்கு ஈரோடு காவலத்துறை மறுப்பு! - Seithipunal
Seithipunal


செப்டம்பர் 17 அன்று ஈரோட்டில் நடைபெறவுள்ள தந்தை பெரியாரின் பிறந்தநாள் ஊர்வலத்திற்குப் போலீசார் அனுமதி மறுத்துவிட்டதாகத் தொலைக்காட்சிகளில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என ஈரோடு மாவட்டக் காவலத்துறை அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.

தி.க. மனு தாக்கல்: செப்டம்பர் 14-ஆம் தேதியான இன்று, ஈரோடு நகரக் காவல் நிலையத்தில் திராவிடர் கழகம் சார்பில் வரும் 17.09.2026 அன்று காலை 10:30 மணிக்கு அமைதியாக ஊர்வலமாகச் சென்று பெரியாருக்கு மரியாதை செலுத்த அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது.

அனுமதி ஆணை வழக்கம்: திராவிடர் கழகத்தின் மனுவைப் பரிசீலித்த காவல்துறை, மேற்படி ஊர்வலம் நடத்த உரிய அனுமதி வழங்கி, அதற்கான செயல்முறை ஆணையை (Proceedings order) உடனடியாக வழங்கியுள்ளது.

உண்மைக்குப் புறம்பான தகவல்கள்: எனவே, ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் உண்மைக்கு மாறானவை என ஈரோடு மாவட்டக் காவலத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Erode District Police Issue Rebuttal Confirm Permission Granted for Periyar Anniversary Rally


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->