ஈரோடு இடைத்தேர்தல்.. ஓபிஎஸ்-க்கு ஆதரவு.. கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு.! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா உயிரிழந்தை தொடர்ந்து இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக இ வி கே எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல் தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக கட்சியில் இபிஎஸ் - ஓபிஎஸ் தனித்து போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் அமமுக கட்சி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தனியரசு ஆதரவு தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் இல்லாமல் ஈபிஎஸ் தனித்து நின்று வெற்றி பெற முடியயாது. திமுக அணி கூட்டணி கட்சிகளுடன் வலுவாக உள்ளதாக கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode by election kongu Younger party support OPS


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->