ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து மநீம கமல்ஹாசன் இன்று பிரச்சாரம்.!
Erode by election kamal support to election Champaign Congress
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா கடந்த டிசம்பர் 4ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புனு தாக்கல் மற்றும் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் மற்றும் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் அலுவலர் சிவகுமார் வெளியிட்டுருந்தார்.
அதன் அடிப்படையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 75 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனையடுத்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மைய்யம் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதன்படி திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
இதில், காங்கிரஸ் கட்சியின் சார்பாக இவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து மக்கள் நீதி மைய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
English Summary
Erode by election kamal support to election Champaign Congress