ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திமுக அதிமுக இடையே மட்டுமே போட்டி.. வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா கடந்த டிசம்பர் 4ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனிடையே இடைத்தேர்தலுக்கான வேட்புனு தாக்கல் மற்றும் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.

இறுதியாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 75 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனையடுத்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.

இதில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக அதிமுக தேமுதிக நாதக ஆகிய கட்சியினுடைய கடும் போட்டி நிலவும் என கூறப்பட்ட நிலையில், தற்போதைய இடைத்தேர்தல் நிலவரப்படி திமுக மற்றும் அதிமுக இடையே மட்டும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொதுமக்களுக்கு ஓட்டுக்காக பணம் மது பிரியாணி வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து லயோலா கல்லூரி மாணவர்கள் கள ஆய்வு செய்தனர். இதில் திமுக 45 சதவீத வாக்குகளையும், அதிமுக 39.52 சதவீத வாக்குகளையும் பெறும் என ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode by election DMK and ADMK only competitive Loyola college students survey


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->